நாம் வாழ்வது ஒரு உலகம் இங்கு மனிதன் வாழ்வதை போல வாழ்ந்தாலே நம்மால் வாழ முடியும் இல்லாவிடில் உலகம் நம்மை அழித்து விடும், நாம் யாரையும் ஏமாற்றவில்லை நம்மை ஏமாற்ற வைக்கின்றனர்.
நாம் உண்மையாக இருந்தால் நம்மை நம்ப மாட்டார்கள் அதுவே பொய்யாக இருந்தால் உறுதியாக நம்புவார்கள்.
நாம் யாரிடமும் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது, நம் வாழ்க்கை மிக சிறியது அதனை சாதாரணமாக வாழுவோம் அதற்காக உலகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.
நாம் நம்மை ஏமாற்றவில்லை, நம்மால் மற்றவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். உண்மையான வாழ்கை மற்றவர்களை எரிச்சல் படுத்தும் ஆகவே நம்மால் மற்றவர்கள் சந்தோசமாக வாழ்வதை தெரிந்துகொண்டு நாமும் அவர்களுடன் சந்தோசமாக போலியான வாழ்வை வாழ்வோம் ஒரே சமூகத்தில், நமது வாழ்வில் நாம் தனியாக உண்மையான வாழ்வை வாழுவோம்.
ஏன் நீங்கள் உலகத்தை குறை சொல்லுகிறீர்கள் உங்களை போல் பொய்யான மனிதர்கள் வாழ்வதால் தான் உலகமும் பொய்யாக தெரிகிறது. இந்த உலகத்தில் உண்மையானவர்களும் இருக்கின்றார்கள் நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் பொய்யானவர்களிடம் மட்டும் பழகுவதால் மட்டும் தான் உங்களால் உண்மை எது பொய் எது என்று புரிந்துகொள்ளும் மன நிலை இல்லை நீங்களும் அவர்களுடன் சேர்ந்து பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பொய்யானவர்களை விட்டு விலகி வெளியில் வந்து பாருங்கள் உண்மையானவர்களை நீங்கள் அறிய கூடியதாக இருக்கும். உங்களை யாரும் ஏமாற்றவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள் உண்மையாக பழகி பாருங்கள் அவர்களின் உறவிலும் உண்மை இருக்கின்றது என்பதை உணர்வீர்கள் .
பொய்யாக நடிப்பதும் சுய இயல்பை மறைத்து வாழ்வதும் தான் இந்த உலகத்தில் உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். உண்மையை கூறும் போது இந்த உலகம் கேட்பது இல்லை Bhavya!ஒருவரை காப்பாற்ற பொய் சொல்வது வேறு, பொய்யாக நடிப்பது வேறு. ஒரு நன்மைக்காக பொய் சொல்வது தவறல்ல. ஆனால் தன் சுய இயல்பை மறைத்து போலியாக நடிப்பது தவறு.
Bookmarks